23 ஆண்டுகளாக சாதி ரீதியாக போராட்டம்
கோவை மருதமலை சாலை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருபவர் செல்வம். 30 வருடங்கள் மேலாக நிரந்தர பணியாளராக பணியாற்றி வருகிறார்.
மேலும் இவருக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம் 22 வருடங்களாக வழங்கப்பட வில்லை. இதனால் இவருக்கு மாதம் 40.334/- இழப்பீடு ஆவதாக தெரிவித்து உள்ளார். தாழ்தப்பட் பழங்குடி இன பல்கலைக்கழக சங்கத்தின் செயலாளராக உள்ளார்.
ஆட்சி மன்ற குழு ,உண்மை தண்மை கண்டறியும் குழு , துணைவேந்தர் பொறுப்பு குழு உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட குழுக்கள் ஒப்புதல் வழங்கியும் ஊதியம் வழங்கப்பட வில்லை.
தொடர்ந்து தாழ்த்தப்பட்ட பழங்குடி இனத்தவர்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தமைக்கு கடந்த 23 ஆண்டுகளாக என்னை நிர்வாகம் பழி வாங்கி வருகிறது.
எனவே தனக்கு வழங்கப்பட வேண்டிய நியாயமான ஊயத்திதை வழங்கும் வரை நடந்த 25 ஆம் தேதி பல்கலைக்கழக நிர்வாகத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மனு கொடுத்து உள்ளார்.
அதில் இன்று முதல் வரும் 14 ஆம் தேதி வரை கழுத்தில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிய உள்ளதாகவும் தொடர்ந்து 14 ஆம் தேதி அன்று சமத்துவ தினத்தில் உண்ணாவிரதம் இருப்பதாகவும் கூறி மனு அளித்து உள்ளார்.
அதன் அடிப்படையில் இன்று கோரிக்கை அட்டை அணிந்து அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். அதான்ல பல்கலைக்கழக ஊழியர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.