இரட்டை கொலைக்கு 226 ஆண்டுகள் சிறை

அலாஸ்காவைச் சேர்ந்த இரண்டு பெண்களைக் கொலை செய்த குற்றவாளிக்கு 226 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அலாஸ்கா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த நபர் ஒரு பெண்ணை சாகும் வரை துன்புறுத்தியதோடு, சம்பவத்தை வீடியோ எடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கேத்லீன் ஹென்றி மற்றும் வெரோனிகா அபூச்சுக் ஆகியோரின் கொலைகளுக்காக பிரையன் ஸ்டீபன் ஸ்மித்துக்கு தலா 99 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மற்றைய 28 வருட சிறைத்தண்டனை பெண்களை பாலியல்ரீதியாக துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் சாட்சியங்களை சிதைத்த குற்றச்சாட்டின் பேரில் வழங்கப்பட்டது.
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பிரையன் ஸ்டீவன் ஸ்மித் பின்னர் அமெரிக்க குடியுரிமை பெற்றார்.
(Visited 14 times, 1 visits today)