2250 ஆண்டுகள் பழமையான கழிவுநீர் அமைப்பு துருக்கியில் கண்டுப்பிடிப்பு!
துருக்கியில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் போது ஒரு பெரிய, பழமையான சாக்கடை கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த சாக்கடை இன்னும் செயல்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. முக்லாவில் உள்ள வரலாற்று நகரமான ஸ்ட்ராடோனிகேயாவில் கழிவுநீர் அமைப்பைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த அமைப்பானது சுமார் 2500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
“2,250 ஆண்டுகளுக்குப் பிறகும் தண்ணீர் தானாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதனால்தான் நாங்கள் நம்பமுடியாத அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறோம்,” என்று ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த கழிவுநீர் அமைப்புகள் அனைத்தும் தெருக்களில் இணைக்கப்பட்டு ஓடையை நோக்கி ஓடுகின்றன, நகரத்திற்கு எந்த அசௌகரியமும் ஏற்படாமல் வெளியேற்றப்படுகின்றன” என்று நிபுணர் கூறியுள்ளார்.





