இலங்கை

பண்டார வன்னியன் 220ம் ஆண்டு நினைவு -துரைராசா ரவிகரன் ஆதங்கம்

அன்னிய ஆதிக்கத்தில் இருந்து விரட்டியடித்த ஒரு வீரனை நினைவு கூராமல் அரசாங்கம் இதிலும் தமிழர் என்ற புறக்கணிப்பை காட்டி நிற்கின்றது என் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

மாவீரன் பண்டார வன்னியனின் 220 ஆம் ஆண்டு வெற்றி நாள் நினைவு கூரல் முல்லைத்தீவு நகரில் உள்ள பண்டாரவன்னியனின் திருவுருவச் சிலையடியில் இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இன்றையதினம் தமிழர்களுடைய வீர முத்திரை பதிக்கப்பட்ட நாள்.அதாவது பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஆங்கிலேயரினுடைய கோட்டைக்குள் புகுந்து பீரங்கிகளை கைப்பற்றி அவர்களிடத்தே கனரக ஆயுதங்களோடு இந்த இடங்களை ஆக்கிரமித்து இருந்த வேளை அந்த நேரம் இருந்த வாள், அம்புவில் இப்படியாக தங்களிடம் இருந்த ஆயுதங்கள் மூலம் மாவட்ட செயலகம் அமைந்திருக்கும் முன்னாள் உள்ள இடத்தில் ஆங்கிலேயருடைய கோட்டையை 1803ஆம் ஆண்டு இதேபோன்றதொரு நாளில் போரிட்டு கைப்பற்றி, இரண்டு பீரங்கிகளையும் மாவீரன் பண்டார வன்னியன் கைப்பற்றிய நாளாக இன்றையநாள் அடையாளப்படுத்தப்பட்டு ஒவ்வொரு வருடமும் நினைவேந்தல் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்