22 வயது கொலம்பிய மாடல் அழகி சுட்டுக்கொலை

கொலம்பியாவின் குகுடாவில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்தும் 22 வயதான மரியா ஜோஸ் எஸ்டுபினன் சான்செஸ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
லா ரிவியரா பகுதியில் உள்ள சான்செஸ் வீட்டில் இருந்தபோது, டெலிவரிமேனாக வந்த ஒரு நபர் போலி பரிசுடன் அவரை அணுகி அருகிலிருந்து அவரைச் சுட்டதாக உள்ளூர் ஊடகமான நோட்டிசியாஸ் கராகோல் தெரிவித்துள்ளது.
அக்கம் பக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமராவின் காட்சிகளில், சந்தேக நபர் சான்செஸைச் சுட்டுக் கொன்ற பிறகு அவரது வீட்டிலிருந்து ஓடுவதைக் காட்டியது.
அறிக்கையின்படி, சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே சான்செஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தனது முன்னாள் காதலனுக்கு எதிரான குடும்ப வன்முறை வழக்கில் வெற்றி பெற்று, 30 மில்லியன் COP தொகையைப் பெற்றதாகக் கூறப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, இந்த தாக்குதல் நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.