இலங்கை கடற்பரப்பில் 22 இந்திய மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த மீனவர்கள் நேற்றிரவு பெதுருதுடுவ மற்றும் காங்கசந்துறை எல்லையில் வைத்து கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மூன்று இந்திய இழுவை படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகள் காங்கசந்துறை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு பின்னர் கடற்றொழில் பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
(Visited 12 times, 1 visits today)





