இலங்கையில் 2023 இல் மாத்திரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 22 கோடி பறிமுதல்!
இந்த வருடம் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் மூலம் 22 கோடி ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.
அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், இருப்புக்களை மறைத்து வைத்தல், காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல், விலைகளை காட்சிப்படுத்தாமை போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நுகர்வோர் விவகார அதிகாரசபையின் கூற்றுப்படி, நாடு முழுவதும் சுமார் 22,000 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன, அவற்றில் 19,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நேற்று (15.11) மட்டும் பொலனறுவை, நுவரெலியா ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைளில் 4 இலட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.