சிரியாவை மீண்டும் கட்டியெழுப்ப $216 பில்லியன் தேவை – உலக வங்கி

உள்நாட்டுப் போருக்குப் பிறகு சிரியாவின் மறுகட்டமைப்புக்கு 216 பில்லியன் டாலர்கள் வரை செலவாகும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
இந்த செலவு சிரியாவின் 2024ம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகம் ஆகும்.
குடியிருப்பு கட்டிடங்களுக்கான சேதங்கள் $75 பில்லியன் மற்றும் குடியிருப்பு அல்லாத கட்டமைப்புகளுக்கு $59 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடுமையான போர்கள் நடந்த அலெப்போ (Aleppo) மாகாணம் மற்றும் டமாஸ்கஸ் (Damascus) கிராமப்புறங்களுக்கு அதிக முதலீடு தேவைப்படும் என்று உலக வங்கியின் மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பரில் நீண்டகால ஆட்சியாளர் பஷார் அல்-அசாத் (Bashar al-Assad) நீக்கப்பட்ட பின்னர், சிரியாவின் புதிய இஸ்லாமிய அதிகாரிகள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவால்களில் ஒன்று மறுகட்டமைப்பு ஆகும்.
“எதிர்வரும் சவால்கள் மகத்தானவை, ஆனால் மீட்பு மற்றும் மறுகட்டமைப்பை ஆதரிக்க சிரிய மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்ற உலக வங்கி தயாராக உள்ளது,” என்று உலக வங்கியின் மத்திய கிழக்குப் பிரிவு இயக்குனர் ஜீன்-கிறிஸ்டோஃப் கேரெட் (Jean-Christophe Garret) குறிப்பிட்டுள்ளார்.