கர்நாடகாவில் காதலை நிராகரித்த 21 வயது பெண் கத்தியால் குத்தி கொலை

கர்நாடகாவின் ஹுப்பாலியில் வசித்து வந்த 21 வயது அஞ்சலி அம்பிகேரா என்ற பெண் அண்டை வீட்டு காரரின் காதலை மறுத்ததால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.
அஞ்சலி அம்பிகேரா தூங்கிக் கொண்டிருந்தபோது, 21 வயதான கிரிஷ் சாவந்த் என்பவர் அவரது வீட்டிற்குள் நுழைந்து அஞ்சலியை கத்தியால் பலமுறை குத்தியதாகக் கூறப்படுகிறது.
சாவந்த் தற்போது தலைமறைவாக உள்ளதால், போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
சாவந்த் தன்னை காதலிக்குமாறு அம்பிகேராவை வற்புறுத்தி வந்தார். ஆனால் அம்பிகேரா அதை மறுத்துவிட்டார். அதனால் கோபடைந்த சாவந்த், அஞ்சலியை கத்தியால் குத்தி கொன்றார்.
(Visited 21 times, 1 visits today)