உத்தரபிரதேசத்தில் வரதட்சணை கேட்டு 21 வயது கர்ப்பிணி பெண் அடித்து கொலை

உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரியில் உள்ள கோபால்பூர் கிராமத்தில் வரதட்சணை கேட்டு கர்ப்பிணிப் பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
ரங்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட 21 வயது ரஜ்னி குமாரி இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சச்சின் என்ற நபரை திருமணம் செய்துள்ளார்.
சச்சின், அவரது சகோதரர்கள் பிரன்ஷு, சஹ்பாக் மற்றும் உறவினர்களான ராம் நாத், திவ்யா மற்றும் டினா ஆகியோர் கூடுதலாக ரூ.5 லட்சம் வரதட்சணை கொண்டு வருமாறு வற்புறுத்தியுள்ளனர்.
கோரிக்கை நிறைவேறாததால், அவர்கள் குமாரியை சித்திரவதை செய்து அவரை கொன்று பின்னர் ஆதாரங்களை அழிக்க அவர்கள் தங்கள் வயலில் புதைத்தாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து அறிந்ததும், ரஜ்னியின் தாயார் சுனிதா தேவி குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேர் மீது ஓஞ்சா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
(Visited 3 times, 1 visits today)