டெக்சாஸில் சக ஊழியர்களை கொன்று தற்கொலை செய்து கொண்ட 21 வயது இளைஞன்
டெக்சாஸின்(Texas) சான் அன்டோனியோவில்(San Antonio) 21 வயது இளைஞர் ஒருவர் மூன்று சக ஊழியர்களைச் சுட்டுக் கொன்று, பின்னர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நகரின் வடக்குப் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உயிரிழந்ததாக சான் அன்டோனியோ காவல் துறை தெரிவித்துள்ளது.
சில மணி நேரங்களுக்குப் பிறகு துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், துப்பாக்கிதாரி ஜோஸ் ஹெர்னாண்டஸ் காலோ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றாலும் இது தற்செயலானது அல்ல என்று காவல்துறைத் தலைவர் வில்லியம் மெக்மானஸ்(William McManus) தெரிவித்துள்ளார்.





