டெல்லியில் ஆம்புலன்ஸில் மதுபானம் கடத்திய 21 வயது இளைஞர் கைது
டெல்லியின் துவாரகாவில் (Dwarka) சட்டவிரோத மதுபான கடத்தலில் ஈடுபட்ட 21 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹரியானாவின் ரோஹ்தக்கை (Rohtak) சேர்ந்த ரித்திக் என அடையாளம் காணப்பட்ட குற்றவாளி, துவாரகா விரைவுச் சாலையில் (Expressway) ஆம்புலன்ஸில் (ambulance) சட்டவிரோத மதுபானங்களை கொண்டு சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் போது, 70 ராயல் ஸ்டாக் (Royal Stag) பாட்டில்கள் மற்றும் 14 ராயல் கிரீன் (Royal Green) பாட்டில்கள் உட்பட மொத்தம் 1,400 மதுபான பாட்டில்கள் மீட்கப்பட்டுள்ளது.
ரித்திக் ஹரியானாவின் பகதூர்கரில் இருந்து மதுபானங்களை வாங்கி டெல்லி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு சென்ற போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் மீது டெல்லி கலால் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.





