காசா தாக்குதலில் 21 இஸ்ரேலிய வீரர்கள் பலி
கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய வீரர்களின் இறப்பு எண்ணிக்கையை 21 ஆக அதிகரித்துள்ளது
இஸ்ரேலின் இராணுவம் அதன் இறப்பு எண்ணிக்கையை மறுபரிசீலனை செய்துள்ளது. இது போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலிய இராணுவத்தின் மிகப்பெரிய உயிரிழப்பு ஆகும்.
காசாவில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய வீரர்களின் இறப்புச் செய்தியைக் கேட்டபின், அது “தாங்க முடியாத கடினமான காலை” என்று இஸ்ரேலின் ஜனாதிபதி, ஐசக் ஹெர்சாக் கூறியுள்ளார்
இதற்கிடையில் , பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு , “முழுமையான வெற்றி” வரை காசாவில் போரை இஸ்ரேல் முன்னெடுக்கும் என்று கூறியுள்ளார்
அத்துடன் அக்டோபர் 7 முதல் காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மொத்தம் 25,490 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 63,354 பேர் காயமடைந்ததாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 195 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 354 பேர் காயமடைந்தனர் என்று அமைச்சகம் மேலும் கூறியுள்ளது