ஈக்வடாரில்(Ecuador) பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 21 பேர் மரணம்
ஈக்வடாரில்(Ecuador) ஒரு பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் 21 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 40 பேர் காயமடைந்துள்ளனர்.
மத்திய நகரங்களான குவாரானா(Guaraná) மற்றும் அம்படோ(Ambato) இடையே பேருந்து சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது
ஈக்வடாரில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் போக்குவரத்து விபத்துக்கள் அடங்கும். ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் ஒருவர் கொல்லப்படுகிறார்.
2025ம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் மட்டும், 4,756 போக்குவரத்து விபத்துக்கள் நடந்துள்ளதாகவும் அதில் 565 பேர் உயிரிழந்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு 2,300 போக்குவரத்து தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன, அதில் ஓட்டுநர் அனுபவமின்மை அல்லது பொறுப்பற்ற தன்மையால் ஏற்பட்ட விபத்துக்களே அதிகம்.
(Visited 2 times, 2 visits today)





