2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலியாவில் ஏற்படவுள்ள மாற்றம்!

ஆஸ்திரேலிய அரசாங்கம் 2050 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் வீதி மரணங்களை ஒழிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் வீதி விபத்துகளில் 1,300க்கும் மேற்பட்டோர் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி மாதத்தில் மட்டும் ஆஸ்திரேலியாவில் 114 வீதி மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
அதன்படி, அடுத்த 25 ஆண்டுகளுக்கு அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட வீதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறப்புத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கப்போவதாகக் கூறியுள்ளது.
கடுமையான போக்குவரத்துச் சட்டங்கள் மற்றும் பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் காரணமாக கடந்த சில தசாப்தங்களாக ஆஸ்திரேலியாவில் வீதி விபத்துகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
இருப்பினும், அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் இன்னும் பதிவாகி வருவதாகவும், வார நாட்களில் சாலை விபத்து இறப்புகள் குறைந்து வரும் அதே வேளையில், வார இறுதி நாட்களில் இறப்பு விகிதம் அதிகமாகவே இருப்பதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.
பாடசாவை மண்டல பாதுகாப்புத் திட்டத்தின் விளைவாக 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே வீதிவிபத்து இறப்புகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என்பது இங்கு ஊக்கமளிக்கும் காரணியாகும்.