2026 FIFA உலகக் கோப்பை இறுதி போட்டி நடைபெறும் இடம் அறிவிப்பு

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிபா நடத்தும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறும். அதன்படி 2026-ம் ஆண்டு அடுத்த உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது.
இந்த உலகக் கோப்பையை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் நடத்துகின்றன.
இந்த நிலையில் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நியூஜெர்சியில் இறுதிப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிப் போட்டியை நடத்த நியூயார்க், டெக்சாஸ் மாநிலம் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் நியூயார்க் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் 48 அணிகள் பங்கேற்கின்றன.
மெக்சிகோவில் ஜூன் 11-ந்தேதி உலகக் கோப்பை தொடர் தொடங்கி, ஜூலை 19-ந்தேதி நியூயார்க்கில் முடிவடைகிறது. மொத்தம் 16 நகரங்களில் போட்டி நடத்தப்படுகிறது.
(Visited 14 times, 1 visits today)