ஐரோப்பா

டெலிகிராம் CEO பவெல் துரோவ் பிரான்ஸை விட்டு வெளியேற தடை

  • August 29, 2024
  • 0 Comments

கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட டெலிகிராம் சிஇஓ பவெல் துரோவ் விடுவிக்கப்பட்டார். இருப்பினும் அவர் மீதான குற்றச்சாட்டு காரணமாக அவர் பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெலிகிராம் மூலம் நடைபெறும் சட்டவிரோத குற்றச் செயல்களுக்கு அந்நிறுவனம் துணை போகிறது, குற்றவியல் நடவடிக்கையை கண்காணிக்க தவறியது மற்றும் பயனாளர்களின் தரவுகளை அரசிடமிருந்து மறைத்து பாதுகாத்தது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை (ஆக. 24) பவெல் துரோவை பிரான்ஸ் அரசு கைது செய்தது. இந்நிலையில், […]

பொழுதுபோக்கு

யோகி பாபு ஒரு குப்பை… பணத்தை பதுக்குகின்றார் – அதிர்ச்சி தகவல்

  • August 29, 2024
  • 0 Comments

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. கைவசம் டஜன் கணக்கிலான படங்களை வைத்திருக்கும் யோகிபாபு, பிசியாக நடித்து வருகிறார். இருந்தாலும் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார் யோகிபாபு. அதிலும் யோகிபாபு கால்ஷீட் கொடுத்துவிட்டு ஷூட்டிங்கிற்கு வர மறுப்பதாகவும், இதனால் ஏராளமான தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் யோகிபாபு மீது வலைப்பேச்சு யூடியூப் சேனலில் விமர்சித்தனர். அவர்களின் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அண்மையில் பேட்டி ஒன்றை அளித்த யோகிபாபு, தான் […]

ஆசியா

சிங்கப்பூர் சோதனைச் சாவடியில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்

  • August 29, 2024
  • 0 Comments

சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் 33 வயதுப் பெண் மீது குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டுள்ளது. அதிகாரியின் கைத்துப்பாக்கியைக் கைப்பற்ற முயன்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சூ டிங் (Xu Ting) சட்டவிரோதமாய் ஆயுதம் வைத்திருந்ததாக ஆயுதக் குற்றச்செயல் சட்டத்தின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது. நேற்று முன்தினம் சூ மலேசியாவுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டபின், உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடிக்குத் திரும்பியதாக நம்பப்படுகிறது. சீனாவைச் சேர்ந்த அவர், குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் பெண் அதிகாரியிடம் இருந்து கைத்துப்பாக்கியைக் கைப்பற்ற முயன்றதாகக் குற்றச்சாட்டு சொல்கிறது. அவர் உடனடியாகக் […]

இலங்கை செய்தி

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – விஞ்ஞாபனத்தை வெளியிட்ட ரணில்

  • August 29, 2024
  • 0 Comments

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெளியிடப்பட்டது. “ரணிலுடன் நாட்டை வெற்றிகொள்ளும் ஐந்தாண்டுகள்” என்ற தொனிப்பொருளில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. “தேரவாத வர்த்தகப் பொருளாதாரம், 2025 இற்கு அப்பால் செல்லும் செயல்முறை, ஒளிமயமான சமுதாயத்தை நோக்கி, வெற்றிபெறும் தாய்நாடு, ஒன்றிணைந்த இலங்கை” ஆகிய 05 பிரதான கூறுகளை இந்த தேர்தல் விஞ்ஞாபனம் உள்ளடக்கியுள்ளது. 2022 நெருக்கடிக்குப் பிறகு நாங்கள் சரியான […]

செய்தி

டுபாயில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் கும்பலின் தலைவர்

  • August 29, 2024
  • 0 Comments

33 வயதான கிட்மால் பினோய் டில்ஷான் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் டுபாயில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டு இன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவர் கொலை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றுக்கான வாரண்ட்களை வைத்திருந்தார். சந்தேக நபர் மத்துகம ஷான் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரின் பிரதான சீடன் எனத் தெரிவிக்கப்படுகிறது. கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு […]

பொழுதுபோக்கு

மழையில் ஆட்டம் போட்ட ஷ்ருதி ஹாசனின் வைரல் வீடியோ!

  • August 29, 2024
  • 0 Comments

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள், நடிகை, பாடகி என பன்முகத் திறமை கொண்டவர் ஸ்ருதி ஹாசன். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ’லக்’ என்ற திரைப்படம் மூலம் கதா நாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் ஏழாம் அறிவு, சிங்கம், த்ரீ, பூஜை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமன்றி பாடல் பாடுவது, இசையமைப்பது, பாடல் எழுதுவது என அனைத்திலும் திறமை வாய்ந்தவராக வளம் வருகிறார். சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து […]

ஆசியா

ஜப்பானை நெருங்கும் ஆபத்தான சூறாவளி – விமானச் சேவைகள் இரத்து – தொழிற்சாலைகள் மூடல்

  • August 29, 2024
  • 0 Comments

ஜப்பானின் தென்-மேற்கு வட்டாரத்தை கடும் சூறாவளி நெருங்கி வருவதாகவும் அதனை எதிர்கொள்ள தயாராகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அந்தப் பகுதியைக் கடந்த சூறாவளிகளில் ஷான்ஷான் சூறாவளி மிகவும் கடுமையாக இருக்கலாம் என அதிகாரிகள் முன்னுரைத்துள்ளனர். சூறாவளி கடக்கவிருக்கும் பாதையில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். Toyota போன்ற பெரிய நிறுவனங்கள் தொழிற்சாலைகளை மூடியுள்ளன. விமானச் சேவைகள், ரயில் சேவைகள் ஆகியவையும் அடுத்த சில நாள்களுக்கு ரத்துச் செய்யப்பட்டுள்ளன. சூறாவளியால் வெள்ளம், நிலச்சரிவு, பலத்த காற்று ஆகியவை ஏற்படக்கூடுமென ஆய்வகம் தெரிவித்தது. வீடுகளைச் […]

செய்தி வாழ்வியல்

கால் மேல் கால் போட்டு உட்காருபவர்களா நீங்கள்? உங்களுக்கான பதிவு

  • August 29, 2024
  • 0 Comments

கால் மேல் கால் போட்டு அமருவதால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி கால் மேல் கால் போட்டு அமரும் பழக்கம் சமீப காலமாக அதிகரித்து விட்டது. அந்த காலத்தில் இவ்வாறு அமர்ந்தால் வீட்டில் உள்ள பெரியவர்கள் கண்டிப்பார்கள். மேலும் இது மரியாதை குறைவான பழக்கம் எனவும் கூறுவார்கள் .இதனால் உடல்நல கோளாறுகளை சந்திக்க நேரிடும் என அறிவியல் ரீதியாகவும் கூறப்படுகிறது. கால் மேல் கால் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

  • August 29, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் வாழ்க்கைச் செலவு நிவாரணக் கொடுப்பனவுகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நிவாரணங்கள், வாழ்க்கைச் செலவு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள வீட்டு மனைகளின் வங்கிக் கணக்கில் அடுத்த மாதம் முதல் பெறப்படும் என்று கூறப்படுகிறது. மே மாதம் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில் முன்மொழியப்பட்ட 300 டொலர் மின் கட்டணத் தள்ளுபடியானது, ஒவ்வொன்றும் 75 டொலர் வீதம் நான்கு நிகழ்வுகளில் தானாகவே கணக்குகளில் வைப்பு செய்யப்படும். ஏஜிஎல் மற்றும் ஆரிஜின் எனர்ஜி ஆகியவை […]

அறிந்திருக்க வேண்டியவை செய்தி

சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமாக ஒளிரும் பொருளை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

  • August 29, 2024
  • 0 Comments

சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமாக ஒளிரும் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின் (ESO) VLT எனப்படும் மிகப்பெரிய தொலைநோக்கி மூலம் இதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை எங்கும் கண்டிராத அளவுக்கு இது மிகவும் பிரகாசமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் கருந்துளைகளைக் கொண்டு விண்மீன் திரள்கள் சூழ்ந்து ஒளிர்வது குவாசர்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த கருந்துளைகளில் வாயு மற்றும் தூசிகள் அண்டும்போது மின்காந்த கதிர்வீச்சு வெளிப்படுகிறது. இதுவே இதன் ஒளிரும் தன்மைக்குக் காரணமாக அமைத்துள்ளதாகத் […]

error: Content is protected !!