2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை! இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2025 மார்ச் 17 முதல் 26 வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களின் அனுமதி அட்டைகள் ஏற்கனவே சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் பரீட்சார்த்திகளின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள் www.doenets.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து 07 மார்ச் 2025 வரை பதிவிறக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
பரீட்சை விண்ணப்பதாரர்கள் தங்கள் பெயர்கள், பாடங்கள் அல்லது ஊடகத்தில் மாற்றங்களைச் செய்ய விரும்பும் ஆன்லைனில் https://onlineexams.gov.lk/eic மூலம் 10 மார்ச் 2025 வரை செய்யலாம்.
(Visited 3 times, 3 visits today)