உயர்தரப் பரீட்சை முடிவுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
2022 க. பொ. த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் ஜூலை மாதம் 28 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது
பரீட்சைக்கான பொருத்தமான விண்ணப்பங்கள் இணையவழியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும், காலம் முடிந்ததும் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.





