அமெரிக்காவின் ஒரு பகுதியில் அனல்காற்றால் 202 பேர் மரணம்
அமெரிக்காவின் Phoenix நகரில் 202 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் வீசிய அனல்காற்று காரணம் என்று Arizona மாநில அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். மேலும் 350க்கும் அதிகமான மரணங்கள் குறித்து விசாரிக்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அந்த மரணங்களுக்கும் சுட்டெரிக்கும் வெயிலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பீனிக்ஸ் நகரில் கடந்த ஜூலை மாதம் 31 நாட்களுக்கு வெப்பநிலை தொடர்ந்து 43 டிகிரி செல்சியஸைத் தாண்டியது.
வரலாறு காணாத அனல்காற்று டெக்சஸ், நியூ மெக்ஸிகோ, அரிஸோனா, கலிஃபோர்னியா பாலைவனம் ஆகிய பகுதிகளில் வீசியது.
சுகாதாரப் பிரச்சினைகளில் வெப்பத்தாக்கமே ஆக ஆபத்தானது என்று உள்ளூர் மருத்துவ அதிகாரிகள் எச்சரித்தனர். அதனால் மூளைப் பாதிப்பு, மாரடைப்பு உள்ளிட்ட மோசமான விளைவுகள் ஏற்படலாம் என்று அவர்கள் கூறினர்.