பிரான்ஸில் தடையை மீறி வீதிக்கு இறங்கிய 2,000 பேர்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தடையை மீறி பொலிஸாரின் வன்முறைக்கு எதிராக சுமார் 2,000 பேர் நினைவுப் பேரணி நடத்தியுள்ளனர்.
பாரிஸ் புறநகர்ப் பகுதியில் அண்மையில் பதின்ம வயது இளைஞர் பொலிஸாரால் கொல்லப்பட்டார்.
சென்ற வாரம் பிரான்ஸில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் வன்முறை எதிர்ப்பு நினைவுப் பேரணி இடம்பெற்றுள்ளது.
சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்னர் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது கறுப்பின பிரெஞ்சு நபர் அடாமா டிராவ்ரெ (Adama Traore) உயிரிழந்தார்.
தற்போது அவருடைய குடும்பத்தினர் பாரிசில் சட்டவிரோத நினைவுப் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
பொது அமைதிக்குப் பாதிப்பு நேரும் சாத்தியம் அதிகம் என்பதால் பேரணியை அனுமதிக்கமுடியாது என்று நீதிமன்றம் கூறியிருந்தது.
(Visited 21 times, 1 visits today)