2000 மெட்ரிக் டன் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்யும் லங்கா சதொச நிறுவனம்
லங்கா சதொச ஊடாக இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய இலங்கை தீர்மானித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் ‘அண்டை நாடு முதல் கொள்கை’யின் கீழ், தீவு நாட்டிற்கான வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கிய பின்னர், 10,000 மெட்ரிக் டன் வெங்காயத்தை இலங்கைக்கு அனுப்ப இந்தியா சமீபத்தில் முடிவு செய்தது.
இதன்படி, பெரிய வெங்காய இறக்குமதியை அரச அல்லது தனியார் துறை ஊடாக மேற்கொள்வதா என்பது தொடர்பில் வர்த்தக அமைச்சில் கலந்துரையாடப்பட்டதுடன், லங்கா சதொச ஊடாக வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அத தெரணவிடம் வினவியபோது, ஆரம்ப கையிருப்பாக 2000 மெற்றிக் தொன் பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என லங்கா சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இலங்கையின் மாதாந்த பெரிய வெங்காயத்தின் தேவை சுமார் 20,000 மெற்றிக் தொன்கள் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ வலியுறுத்தினார்.