இந்தியா செய்தி

மத்தியப் பிரதேசத்தில் நான்கே நாட்களில் 200 கிளிகள் மரணம்

மத்தியப் பிரதேசத்தின்(Madhya Pradesh) கார்கோன்(Khargone) மாவட்டத்தில் உள்ள நர்மதா(Narmada) நதிக்கரையில் உணவு விஷம் காரணமாக குறைந்தது 200 கிளிகள் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பத்வா(Padwa) பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் உள்ள ஒரு நீர்வழி பாலம் அருகே கடந்த நான்கு நாட்களில் இந்த கிளிகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

மீட்பு நடவடிக்கைகளின் போது சில கிளிகள் உயிருடன் இருந்தன, ஆனால் உணவின் நச்சுத்தன்மை மிகவும் கடுமையானதாக இருந்ததால் அவை சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டன என்று மாவட்ட வனவிலங்கு காப்பாளர் டோனி சர்மா(Tony Sharma) குறிப்பிட்டுள்ளார்.

கால்நடைத் துறை அதிகாரிகளின் கூற்றுப்படி உணவு விஷம் மற்றும் முறையற்ற உணவு முறையே இறப்புகளுக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வனத்துறை அதிகாரிகள் நீர்வழி பாலம் அருகே உணவளிப்பதைத் தடைசெய்து சம்பவ இடத்தில் ஊழியர்களை நியமித்துள்ளனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!