காசாவில் மருத்துவமனைக்குள் புதைக்கப்பட்ட 200 உடல்கள்!வெளியான அதிர்ச்சி தகவல்

காசாவின் அல்ஷிபா மருத்துவமனைக்குள் உயிரிழந்த 200 பேரின் உடல்களை மருத்துவமனைக்குள்ளேயே புதைகுழியொன்றிற்குள் புதைத்துள்ளதாக மருத்துவர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.
மருத்துவமனைக்குள் 200 உடல்களை புதைத்துள்ளதாக மருத்துவர் அட்னான் அல் பேர்ஸ் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.100க்கும் மேற்பட்ட மருத்துவமனை பணியாளர்கள் அந்த உடல்களை புதைத்ததாக கூறிய அவர், சுமார் ஆறுமணித்தியாலங்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
உடல்கள் பல நாட்களாக சிதைவடையும் நிலையில் கைவிடப்பட்டிருந்ததன் காரணமாக பாரியமனித புதைகுழியொன்றை தவிர மருத்துவர்களுக்கு வேறு வழியிருக்கவில்லை என எலும்பியல் அறுவை சிகிச்சை துறையின் தலைவரான வைத்தியர் அல்பேர்ஸ் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையின் கொல்லைபுறத்திலிருந்து வரும் துர்நாற்றம் காரணமாக எங்களால் ஜன்னல்களை திறக்க முடியாத நிலை காணப்பட்டது என தெரிவித்த அவர், அங்கு 120 உடல்கள் காணப்பட்டன அவற்றையும் புதைத்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர பிரேத அறையில் 80 உடல்கள் காணப்பட்டதாகவும், அதில் அதிகமாக பெண்கள் சிறுவர்களின் உடல்கள் எனவும் அவர் வேதனை வெளியிட்டார்.கடந்த மாதம் ஆரம்பித்த இஸ்ரேல் – ஹமாஸ் போர்னும் முடிவுக்கு வராத நிலையில் , காசாவில் நிலை குறித்து உலக நாடுகள் பெரும் கவலை கொண்டுள்ளன.