கனடாவில் 20 வயது இந்திய மாணவர் சுட்டுக் கொலை
கனடாவின்(Canada) டொராண்டோ(Toronto) ஸ்கார்பரோ(Scarborough) பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் 20 வயது இந்திய மாணவர் ஷிவாங்க் அவஸ்தி(Shivang Awasthi) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஹைலேண்ட் க்ரீக் டிரெயில்(Highland Creek Trail) மற்றும் ஓல்ட் கிங்ஸ்டன்(Old Kingston) சாலை அருகே காயமடைந்த ஒருவர் தரையில் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதிகாரிகள் வந்தபோது துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் இருந்த ஷிவாங்க் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதிகாரிகள் வருவதற்கு முன்பே சந்தேக நபர் அப்பகுதியை விட்டு ஓடிவிட்டதாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.





