கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் சுட்டுக்கொலை
கனடாவின் எட்மண்டனில் காவலாளியாக பணிபுரிந்து வந்த 20 வயது இந்திய வம்சாவளி இளைஞரை ஒரு கும்பல் சுட்டுக் கொலை செய்துள்ளது.
எட்மண்டன் போலீஸ் சர்வீஸ் (EPS) இரண்டு நபர்களை கைது செய்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்ஷந்தீப் சிங்கைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது.
ஒரு அடுக்குமாடி கட்டிடத்திற்குள் துப்பாக்கிச் சூடு பற்றிய புகாருக்கு பொலிசார் பதிலளித்தனர்.
107 அவென்யூவை அடைந்தபோது, படிக்கட்டில் உடலைக் கண்டு உடனடியாக முதலுதவி செய்தனர் பின்னர் சிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
மூன்று பேர் கொண்ட கும்பலைச் சேர்ந்த ஒரு நபர் சிங்கை படிக்கட்டுகளில் இருந்து கீழே தள்ளுவதையும், மற்றவர் அவரை பின்னால் இருந்து சுடுவதையும் இணையத்தில் சுற்றி வரும் சிசிடிவி காட்சிகள் காட்டுகிறது.





