கேரளாவில் ரீல்ஸ் படப்பிடிப்பின் போது உயிரிழந்த 20 வயது இளைஞன்
செவ்வாயன்று கடற்கரை சாலையில் ரீல்ஸ் படம்பிடித்துக் கொண்டிருந்த போது அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் 20 வயது இளைஞன் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் வடகரையைச் சேர்ந்த ஆல்வின் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பெற்றோருக்கு ஒரே குழந்தை.
வெள்ளயில் பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரை வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய ஆல்வின், உயர்ரக கார்களுக்கான பொருட்கள் விற்கும் ஷோரூமில் விளம்பர ரீல்களை பதிவு செய்து கொண்டிருந்தார்.
வீடியோவை படம் பிடித்துக் கொண்டிருந்த ஆல்வின் மீது வேகமாக வந்த கார் மோதி தூக்கி வீசியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஷோரூமில் இருந்து கொண்டு வரப்பட்ட லேண்ட் ரோவர் டிஃபென்டர் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஆகிய இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விபத்துக்குள்ளான கார் எது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.