மத்தியப் பிரதேசத்தில் இன்ஸ்டாகிராம் நேரலையில் 20 வயது இளைஞர் தற்கொலை

மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் 20 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை இன்ஸ்டாகிராமில் நேரடி ஒளிபரப்பு செய்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட ராகுல் அஹிர்வர், மாவட்ட தலைமையகத்திலிருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் உள்ள ஷாபூர் நகரத்தைச் சேர்ந்தவர். அவர் காதல் விவகாரம் காரணமாக தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
தனது உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன், ராகுல் ஒருவரை காதலிப்பதாக இன்ஸ்டாகிராமில் நேரடி ஒளிபரப்பில் தெரிவித்தார்.
‘இது எனது கடைசி நாள். நான் வாழ விரும்பவில்லை நண்பர்களே. நான் தூக்கில் தொங்கப் போகிறேன்.வாழ்க்கையில் யாரையும் காதலிக்க வேண்டாம்.இப்போது நீங்கள் அனைவரும் நேரலையில் பாருங்கள்’ என்று இறுதியாக தெரிவித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)