கொழும்பில் 2 நாட்களில் முறிந்து வீழ்ந்த 20 மரங்கள் – ஆபத்தான நிலையில் 200 மரங்கள்
கொழும்பு நகர எல்லையில் கடந்த 2 நாட்களில் 20 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
அண்மையில் கொழும்பு நகரில் ஆபத்தான மரங்கள் அடையாளம் காணப்பட்டது.
எனினும் விழுந்த மரங்களில் ஆபத்தானவை அல்ல என அடையாளம் காணப்பட்ட மரங்களும் இருப்பதாகவும் கொழும்பு மாநகர சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொழும்பு நகர எல்லையில் சுமார் 200 ஆபத்தான மரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதுவரை 100 மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் காற்று காரணமாக, மரங்கள் விழுவது அதிகரித்துள்ளது.
(Visited 16 times, 1 visits today)