இலங்கையில் ரேபிஸ் நோயினால் 20 பேர் பலி : வெறிநாய் கடியால் பாதிக்கப்படுவோரும் அதிகரிப்பு!
இலங்கையில் நாய் கடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த (2024) ஆண்டில் மாத்திரம் ஏறக்குறைய 02 இலட்சம் பேர் வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ரேபிஸ் நோயினால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதார கால்நடை சேவையின் வைத்திய அதிகாரி டொக்டர் யேஷான் குருகே தெரிவித்துள்ளார். அதில் 11 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பாம்பு கடித்ததில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மீதமுள்ள 8 இறப்புகளில், எந்த விலங்கினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெளிவாக அடையாளம் காணப்படவில்லை.
இதேவேளைமனித ரேபிஸ் தடுப்பூசிகளுக்காக வருடாந்தம் 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் செலவிடப்படுவதாக வைத்தியர் யேஷான் குருகே தெரிவித்தார்.