ஆசியா

சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் பலி

சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள தாதிமை இல்லத்தின் மூண்ட தீ காரணமாக 20 பேர் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.ஆனால் தீச்சம்பவம் தொடர்பான மேல் விவரங்களை அது வெளியிடவில்லை.

ஹேபெய் மாநிலத்தில் செங்ட நகரில் உள்ள தாதிமை இல்லத்தில், சீன நேரப்படி செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) இரவு 9 மணி அளவில் தீ மூண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தாதிமை இல்லத்தில் இருந்த மற்றவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அவர்களது உடல்நிலை கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெறுகிறது.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!