கொழும்பில் நீரில் மூழ்கும் அபாயங்கள் உள்ள 20 இடங்கள் கண்டுபிடிப்பு
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அதிக மழையினால் நீரில் மூழ்கும் அபாயம் கொண்ட 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன.
ஆமர்வீதி மற்றும் மருதானை டீன்ஸ் மாவத்தையை அண்மித்த பகுதிகள் அதிகளவில் நீரில் மூழ்குவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்தது.
நீரை அகற்றுவதற்கான வடிகாண் கட்டமைப்பை அண்மித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்களே இந்த நிலைமைக்கான காரணமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களை சீர்செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை மேலும் தெரிவித்தது.





