இலங்கை

ஆசியாவின் சிறந்த விஞ்ஞானிகள் 100 பேரில் 2 இலங்கை தமிழர்கள் தெரிவு

ஆசியாவின் சிறந்த விஞ்ஞானிகள் 100 பேரில், 2 இலங்கை தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் சுந்தரலிங்கம் திருக்கணேஷ் ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

சிங்கப்பூரை தளமாகக் கொண்டு வெளியாகும் ‘ஆசிய விஞ்ஞானி’ என்ற சஞ்சிகை ஆசியாவின் சிறந்த விஞ்ஞானிகள் -100 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்தப் பட்டியல், ஆசியாவிலுள்ள தலைசிறந்த விஞ்ஞானிகளின் விசேட சாதனைகளை அங்கீகரிக்கிறது.

பொதுவாக, இந்தப் பட்டியலில் தெரிவு செய்யப்படும் தலைசிறந்த விஞ்ஞானிகள், அவர்களின் தரமான ஆய்வு வெளியீட்டுக்கப்பால் தேசிய அல்லது சர்வதேச விருது பெற்றிருக்க வேண்டும்.

பதிலாக முக்கியமான விஞ்ஞானக் கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டிருக்க வேண்டும் அல்லது கல்விசார் அல்லது தொழில்சார் தலைமைத்துவத்தை வழங்கியிருக்க வேண்டும்.

அதன்படி விஞ்ஞான பீடாதிபதியாக கடந்த ஜந்து ஆண்டுகள் பணியாற்றிவரும் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் பல தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவற்றில், துணைவேந்தர்கள், இயக்குனர்கள் சபையினரால் வழங்கப்பட்ட பௌதிக விஞ்ஞானத்திற்கான அதிசிறந்த இள ஆராய்ச்சியாளர் விருது, தேசிய விஞ்ஞான மன்றத்தினால் வழங்கப்பட்ட இள விஞ்ஞானி விருது, மற்றும் தேசிய ஆராய்ச்சி பேரவை பல தடவை வழங்கிய சிறந்த ஆராய்ச்சி வெளியீடுகளுக்கான ஜனாதிபதி விருதுகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

இவரின் ஆய்வுக் கட்டுரைகள் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளால் அதிகளவு மேற்கோளிடப்பட்டு வருகின்றன. சர்வதேச தரத்திலான இவரது ஆய்வுச் செயற்பாடுகளினால் ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக தெரிவாகியுள்ள சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன், யாழ் பல்கலைக்கழகத்திற்கு மட்டுமல்லாது யாழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இதேவேளை ஆசிய பிராந்தியத்தின் சிறந்த 100 விஞ்ஞானிகளில் பெருமையுடன் பட்டியலிடப்பட்டுள்ள கணிதத்துறையின் மூத்த பேராசிரியர் எஸ். திருக்கணேஷின் குறிப்பிடத்தக்க சர்வதேச சாதனையை இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம் பெருமையுடன் அறிவித்துள்ளது.

இந்த மதிப்புமிக்க அங்கீகாரம், கணிதத் துறையில் மூத்த பேராசிரியர் திருக்கணேஷ் ஆற்றிய விதிவிலக்கான ஆராய்ச்சிப் பங்களிப்புகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அத்துடன் ஆசியாவின் முன்னணி அறிவியல் சிந்தனையாளர்களில் ஒருவராக அவரது அந்தஸ்தை அங்கீகரிக்கிறது.

(Visited 20 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்