வங்கதேசத்தில் இந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தலைமுடியை வெட்டிய 2 ஆண்கள்
மத்திய வங்கதேசத்தின்(Bangladesh) ஜெனைடாவின்(Zenaida) துணை மாவட்டமான காளிகஞ்சில்(Kaliganj) 40 வயது இந்துப் பெண்ணை இரண்டு ஆண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அவரை ஒரு மரத்தில் கட்டி வைத்து அவரது தலைமுடியை வெட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக ஒரு சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர், மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 45 வயதான ஹசன்(Hasan) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தில் ஒரு வீடு மற்றும் நிலத்தை வாங்கியுள்ளார். ஹசனின் சகோதரர் ஷாஹீனிடமிருந்து(Shaheen) அவர் அந்த நிலத்தை வாங்கியுள்ளார். அப்போதிருந்து ஷாஹீன் அவரைத் துன்புறுத்தி பணம் கேட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவ தினத்தன்று இரண்டு ஆண் உறவினர்கள் அந்தப் பெண்ணைப் பார்க்க வந்திருந்தனர். அந்த நேரத்தில் ஷாஹீனும் ஹசனும் வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்துள்ளனர்.
அப்போது அவரது உறவினர்களை ஒரு அறையில் பூட்டி வைத்து அந்தப் பெண்ணை மற்றொரு அறைக்கு அழைத்துச் சென்று அங்கு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் அந்தப் பெண்ணையும் அவரது உறவினர்களையும் வெளியே இழுத்துச் சென்று, ஒரு மரத்தில் கட்டி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்
தாக்குதலின் போது, அவரது தலைமுடி வெட்டப்பட்டு, அவர் தாக்கப்பட்டதாகவும் முழு சம்பவமும் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டதாகவும் பின்னர் அது சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.





