ஆசியா

சிங்கப்பூர் விமான நிலையத்தில் 2 இந்தியர்களின் மோசமான செயல் – சிறைத்தண்டனை விதிப்பு

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் திருடிய 2 இந்தியர்களில், ஒருவருக்கு சிறைத்தண்டனையும் மற்றொருவருக்கு 700 சிங்கப்பூர் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவிலிருந்து சிங்கப்பூருக்கு ஜூன் 2 ஆம் திகதி விமானத்தில் வந்த அந்த இரண்டு பயணிகளும், பாலிக்கு புறப்படுவதற்கு முன்பு சாங்கி விமான நிலையத்தின் ட்ரான்சிட் பகுதியில் இருந்தனர்.

அப்போது, ​ விமான நிலையத்தில் உள்ள கடைகளில் அவர்கள் திருடியதாகவும், பின்னர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகவும் முன்னர் செய்தி வெளியானது.

அவர்களின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் 30 வயதான கார்க் பிரஷா, இந்தியாவில் இருந்து வந்த பிறகு முனையம் 2ல் உள்ள சார்லஸ் & கீத் என்ற கடைக்குள் நுழைந்தார்.

கடையை சுற்றிப் பார்த்த கார்க், ​​ஒரு கருப்பு நிற haversack பேக்கை எடுத்து லக்கேஜ் டிராலியில் வைத்து, பின்னர் அதற்கு பணம் செலுத்தாமல் கடையை விட்டு வெளியேறினார்.

அவரின் இந்த நடவடிக்கையை கடை ஊழியர் கவனித்தார், பின்னர் இது பற்றி பொலிஸார் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதன் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட கார்க், சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்டார். அதன் பிறகு 80 டொலருக்கும் அதிக விலையுள்ள haversack பேக் அவரிடம் இருந்து மீட்கப்பட்டது.

இந்த நிலையில், திருட்டு குற்றத்தை ஒப்புக்கொண்ட அவருக்கு நேற்று முன்தின கடந்த16 அன்று 700 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.

அதே போல, 29 வயதான கோயங்கா சிம்ரன் என்ற இந்திய பெண்ணும் திருட்டு குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவருக்கு ஜூன் 16 அன்று எட்டு நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை விதிக்க இதேபோன்ற மற்றொரு குற்றச்சாட்டும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!