மும்பையில் ரயில் மோதி 2 பேர் மரணம் – 3 பேர் காயம்
தெற்கு மும்பையில் உள்ள சாண்ட்ஹர்ஸ்ட்(Sandhurst) சாலை ரயில் நிலையம் அருகே ரயில் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐந்து பேர் தண்டவாளங்களைக் கடக்க முயன்ற போது விபத்தில் சிக்கியுள்ளனர். அவர்கள் ஜேஜே(JJ) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு இருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களில் ஒருவர் 19 வயது ஹெல்லி மொஹ்மயா(Helly Mohmaya) என்றும், காயமடைந்தவர்களில் இருவர் 22 வயது கைஃப் சோகலே(Kaif Sokhale) மற்றும் 45 வயது குஷ்பு(Khushbu) என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ரயில் ஊழியர் சங்கங்கள் நடத்திய திடீர் வேலைநிறுத்தம் காரணமாக மத்திய ரயில்வேயில் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்ட சிறிது நேரத்திற்குப் பிறகு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் மும்ப்ராவில்(Mumbra) ஐந்து பேர் உயிரிழந்த விபத்துக்கு வழிவகுத்த இரண்டு மத்திய ரயில்வே ஊழியர்கள் மீது அரசு ரயில்வே காவல்துறை (GRP) வழக்கு பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்வே ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.




