நியூயார்க்கிலிருந்து புளோரிடாவுக்குச் சென்ற விமானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 2 சடலங்கள்
நியூயார்க்கிலிருந்து புளோரிடாவுக்குச் சென்ற JetBlue விமானத்தின் தரையிறங்கும் சாதனம் உள்ள பகுதியில் 2 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்தது.
நேற்று முன்தினம் இந்த விமானத்தில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. சடலங்களின் அடையாளங்கள் தெரியவில்லை.
விமானம் தரையிறங்கிய பிறகு நடத்தப்பட்ட வழக்கமான சோதனையின்போது அவை கண்டுபிடிக்கப்பட்டன.
இருவரும் எப்படி தரையிறங்கும் சாதனம் உள்ள பகுதியினுள் நுழைந்தனர், அவர்களது அடையாளம் ஆகியவை விசாரிக்கப்படுகின்றன.
ஆவணமற்ற குடியேறிகள் சில சமயம் அவ்வாறு செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.





