வெளிநாட்டு கடனாக 1948 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளன!
இந்த ஆண்டு 2435 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுக் கடனாக செலுத்த வேண்டும் எனவும், அதில் 1948 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செப்டம்பர் 30 ஆம் திகதிக்குள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்து உரையாற்றும்போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் மேலும் 487 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தத் தயாராக உள்ளோம். இது 2024 உடன் ஒப்பிடும்போது 761 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகமாகும்.
அத்துடன் 2028 இல் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன் சேவை 3259 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே, இது 2025 உடன் ஒப்பிடும்போது 824 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே அதிகம்” எனத் தெரிவித்துள்ளார்.





