ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 190 போர்க் கைதிகள் பரிமாற்றம்
ரஷ்யா உக்ரைன் இடையே கையெழுத்தான முக்கிய ஒப்பந்தத்தின்படி, இருநாடுகளும் தங்கள் கைதிகளை இடமாற்றி கொண்டனா். இதையடுத்து கைதான வீரர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2022ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கியது. சுமார் 3 ஆண்டுகள் ஆன நிலையிலும் இந்த போர் தொடர்கிறது.
உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ஆரம்பத்தில் ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இதற்கு உக்ரைன் தரப்பிலும் எதிர் தாக்குதல் நடத்தப்படுகிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் இந்த போரில் இந்திய மாணவர்கள் உள்பட ஏராளமானவா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.
இந்த போரால் இருநாடுகளில் உள்ள மக்கள் தொகையில் பெரிதளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டவர்கள் ஒப்பந்த முறையில் கைமாற்றி கொள்ளப்பட்டுள்ளனா்.
ரஷ்யா வீரர்கள் 95 பேரை உக்ரைன் ராணுவம் சிறை பிடித்து வைத்து இருந்தது. இதேபோல் உக்ரைன் வீரர்களையும் ரஷ்யா சிறைப்பிடித்து இருந்தது.
இந்த நிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே சிறைப்பிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.
இதனை தொடர்ந்து தற்போது ரஷ்யா தரப்பில் பிடித்து வைக்கப்பட்டு இருந்த 95 உக்ரைன் வீரர்கள் விடுவிக்கப்பட்டனா். இதேபோல் ரஷ்ய வீரர்கள் 95 பேரையும் உக்ரைன் விடுவித்து உள்ளது. ஒட்டுமொத்தமாக 190 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனா்.
அவர்கள் மகிழ்ச்சியாக சொந்த நாடுகளுக்கு சென்றது. ஏற்கனவே ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 203 பேர் விடுவிக்கப்பட்டு இருந்தனா்.