இரு பெண்களின் சடலங்களை மீட்க தேவைப்படும் 184 மில்லியன் டொலர்!
கனடாவில் இரண்டு பெண்களின் சடலங்களை மீட்பதற்கு 184 மில்லியன் டொலர் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இரண்டு பழங்குடியின பெண்களின் சடலங்களை மீட்பதற்கு இவ்வாறு பாரிய தொகை தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வின்னிபிக் பகுதியில் அமைந்துள்ள குப்பை மேடு ஒன்றிலிருந்து சடலங்கள் மீட்கப்பட வேண்டியுள்ளது.பியே கிறீன் குப்பை மேட்டிலிருந்து சடலங்களை மீட்பது பாரிய செலவு மற்றும் சவால் மிக்கது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குப்பை மேட்டில் காணப்படும் இரசாயனங்கள் உள்ளிட்ட பொருட்கள் வெடித்துச் சிதறும் சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சடலங்களை மீட்பதற்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் கால அவகாசம் தேவைப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.குறித்த குப்பை மேட்டில் தமது உறவினர்களின் சடலங்கள் காணப்படுவதாக உறவினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
எனினும், இந்த சடலங்களை கண்டு பிடிக்கும் நடவடிக்கையானது பாரிய பொருட் செலவையும், நேர விரயத்தையும், ஆபத்துக்களையும் ஏற்படுத்தும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு பாரியளவில் செலவிட்டு தேடினாலும் நிச்சயமாக சடலங்களை மீட்க முடியும் என உறுதிபடக் கூற முடியாது என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.