ஜெர்மனியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 18000 பேர்
ஜெர்மனியில் இருந்து 18000 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
ஜெர்மனியில் அகதிகள் தொடர்பில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசாங்கமானது முன்வந்துள்ளது.
ஜெர்மன் அரசாங்கமானது நிராகரிக்கப்பட்ட அகதகளை கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை மொத்தமாக 17709 பேர் வரை அவர்களது சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் திருப்பி அனுப்பப்பட்டவர்களில் 4100 பேர் மீண்டும் ஜெர்மன் நாட்டுக்கு வந்து அகதி விண்ணப்பம் கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பலர் தாம் சொந்த விருப்பத்தின் பேரில் ஜெர்மன் நாட்டை விட்டு வெளியேறியதாக கூறியுள்ளனர்.
இவ்வாறு கூறி விட்டு பின்னர் அவர்கள் மீண்டும் ஜெர்மன் நாட்டுக்கு வந்து அகதி விண்ணப்பம் மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.
மொத்தமாக இவ்வாறு 1578 பேர் ஜெர்மன் நாட்டை விட்டு வெளியேறியதாக கூறி இருந்தால் கூட 438 பேர் ஜெர்மன் நாட்டை விட்டு சொந்த விருப்பத்தின் பேரில் வெளியேறுவதாக கூறி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது,
ஆனால் இவர்கள் நாட்டுக்கு வந்து மீண்டும் அகதி விண்ணப்பம் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் “ஜெர்மன் நாட்டுக்கு நீ திரும்ப வர கூடாது” என்ற உத்தரவு பிறப்பித்தவர்களில் 2106 பேர் மீண்டும் ஜெர்மன் நாட்டுக்குள் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.