துபாயில் தீபாவளி பண்டிகையின் போது மாரடைப்பால் உயிரிழந்த 18 வயது இந்திய மாணவர்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) கோல்டன் விசா பெற்ற கேரளாவை சேர்ந்த 18 வயது மாணவர் ஒருவர் தீபாவளி கொண்டாட்டத்தின் போது துபாயில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
துபாயின் மிடில்செக்ஸ் பல்கலைக்கழக (Middlesex University) மாணவர் வைஷ்ணவ் கிருஷ்ணகுமார் (Vaishnav Krishnakumar), தீபாவளி கொண்டாட்டத்தின் போது மயங்கி விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வைஷ்ணவுக்கு இதய பிரச்சினைகள் எதுவும் இல்லை ஆகவே மரணம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக துபாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வைஷ்ணவ் தனது ஆரம்ப படிப்பை துபாயில் உள்ள GEMS Own Indian பாடசாலையில் முடித்துள்ளார். அங்கு அவர் மாடல் யுனைடெட் நேஷன்ஸ் கிளப் (Model United Nations Club) மற்றும் OIS விவாத சங்கத்தின் தலைவராக பணியாற்றியுள்ளார்
மேலும், சந்தைப்படுத்தல் மற்றும் தொழில்முனைவோர் பிரிவில் முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். இதனால் அவருக்கு கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கான UAE கோல்டன் விசா வழங்கப்பட்டது.