கின்னஸ் சாதனை படைத்த 18 வயது இந்திய சிறுவன்

இந்தியாவைச் சேர்ந்த 18 வயது சிறுவன், முகத்தில் அதிக முடி கொண்டவராக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
லலித் படிதார் ஒரு சதுர சென்டிமீட்டருக்கு 201.72 முடியுடன் வியக்கத்தக்க சாதனையைப் படைத்துள்ளார்.
‘ஓநாய் நோய்க்குறி’ என்று அழைக்கப்படும் ஹைப்பர் டிரிகோசிஸ் எனப்படும் அரிய மருத்துவ நிலை காரணமாக அவரது முகத்தில் 95 சதவீதத்திற்கும் அதிகமான முடி உள்ளது.
குறிப்பாக தனது ஆரம்ப பள்ளி ஆண்டுகளில் அவர் எதிர்கொண்ட சவால்களை விவரித்தபடிதார், முதல் சில நாட்கள் நன்றாக இல்லை என்றும், அவரது வகுப்பு தோழர்கள் அவரது தோற்றத்தைக் கண்டு பயந்ததாகவும் தெரிவித்தார்.
“அவர்கள் என்னை அறியத் தொடங்கியபோது, அவர்கள் என்னுடன் பேசத் தொடங்கியபோது, நான் அவர்களிடமிருந்து அவ்வளவு வித்தியாசமாக இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். வெளிப்புறமாகத்தான் நான் வித்தியாசமாகத் தெரிந்தேன், ஆனால் நான் உள்ளே வித்தியாசமாக இல்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.