இந்தோனேசியாவில் மலையேற்றத்திற்காக சென்ற 170 பேர் மீட்பு!
இந்தோனேசியாவில் செமரு எரிமலை வெடித்துள்ள நிலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 170க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர்.
குறித்த 178 பேரும் ஜாவா மாகாணத்தின் லுமாஜாங் (Lumajang ) மாவட்டத்தில் உள்ள மலையின் அடிவாரத்தில் சிக்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
“செமெரு மலையின் நில அதிர்வு செயல்பாடு, வெடிப்பு உயர் மட்டத்தில் தொடர்வதை குறிப்பதாகவும், பனிச்சரிவு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மலையேற்றத்திற்காக சென்ற பலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 3 times, 4 visits today)




