ஓமானில் சீரற்ற வானிலையால் 17 பேர் உயிரிழப்பு!
ஓமானில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அண்டை நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அரேபிய தீபகற்பத்தின் பிற பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது.
இந்நிலையில் சீற்ற வானிலையால் பலர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அதேநேரம் அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.





