பலாங்கொடையில் புதையல் தோண்ட முற்பட்ட 17 பேர் கைது!

பலங்கொட – சமனலவெவ பகுதியிலுள்ள வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து புதையல் தோண்டுவதற்கு முயற்சித்த 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சமனலவெவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போதே குறித்த 17 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
26 முதல் 54 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 12 times, 1 visits today)