வட அமெரிக்கா

அமெரிக்காவில் 160 ஆண்டுகள் பழமையான தேவாலயத்திற்கு மின்னலால் நேர்ந்த கதி (வீடியோ)

அமெரிக்காவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று மின்னல் தாக்கியதில் தீ விபத்துக்குள்ளாகி உள்ளது.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸின் ஸ்பென்சரில் உள்ள முதல் காங்கிரேஷனல் யுனைடெட் என்ற 160 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தில் மின்னல் தாக்கி தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தேவாலயத்தில் பொருத்தப்பட்டு இருந்த அபாய கருவியின் எச்சரிக்கை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து தீயணைக்கும் பணியில் இறங்கினர்.ஆனால் அதற்குள் தீ தேவாலயத்தின் தரை தளம் முதல் கோபுரம் வரை பரவியது, இதில் தேவாலயத்தின் மேல் கோபுரம் தரையில் விழுந்து நொறுங்கியது.

Lightning fire engulfs 160-year-old Massachusetts church

தேவாலயத்தில் ஏற்பட்ட இந்த விபத்தின் போது பக்தர்கள் யாரும் உள்ளே இல்லாததால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தேவாலயம் 1800களில் கட்டப்பட்டது என்று தேவாலயத்தின் இடைக்கால போதகர் மேக்லியோட் தெரிவித்துள்ளார்.

தீ விபத்து குறித்து தீயணைப்பு வீரர்கள் வழங்கிய தகவலில், மழைப்பொழிவின் போது ஏற்பட்ட மின்னலில் தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்