ஆஸ்திரேலியாவில் 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி – ஆசிய நாட்டவரை தேடும் பொலிஸார்

மெல்போர்னின் தென்மேற்கு பகுதியில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தெற்காசிய ஆடவரை கைது செய்ய விக்டோரியா மாநில பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
பொய்ன்ட் குக் பகுதியில் வைத்து குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
25 வயதான சந்தேக நபர் இந்திய பிரஜையாக இருக்கலாம் அல்லது தெற்காசிய நாட்டின் பிரஜையாக இருக்கலாம் என ஊகிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் சாம் என்ற பெயரில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தன்னை அறிமுகப்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவரின் புகைப்படம் தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளதுடன், ஏதேனும் தகவல் இருப்பின் 1800 333 000 என்ற இலக்கத்திற்கு தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
(Visited 14 times, 1 visits today)