சீனா-நிலச்சரிவில் சிக்கி 16 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
சீனாவின் சியான் நகரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலச்சரிவில் சிக்கி பலர் காணாமல் போயுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் காணாமல் போனவர்களைக் கண்டறியும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் சீனாவில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன என்றும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 14 times, 1 visits today)




