சீரற்ற காலநிலை காரணமாக 16 பேர் பலி

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
களனி, களு, நில்வலா, ஜிங் மற்றும் அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள பகுதிகளில் வெள்ள நிலைமை தொடர்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அவற்றுள் களனி ஆற்றைச் சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
இன்று (03) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் வரக்காபொல பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அந்த மதிப்பு 246.5 மில்லிமீற்றராகக் காட்டப்பட்டது.
இதேவேளை, பல பகுதிகளில் பெய்து வரும் மழையினால் நாட்டின் 5 முக்கிய ஆற்றுப்படுகைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
(Visited 34 times, 1 visits today)